2003ல் மலையாளத்தில் 'மனசினக்கரே' என்ற படம் மூலம் நயன்தாரா முதன் முதலில் திரையுலகில் கால் பதித்தார். இந்த திரைப்படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நயன் நடித்திருந்தார்
2005ல் வெளிவந்த அய்யா திரைப்படம் இவரது முதல் தமிழ் படம். முதல் படம் என்றாலும், தன் இயல்பான நடிப்பினாலும், சிரிப்பினாலும், பலரது கவனத்தை நயன் ஈர்த்தார்.
இயக்குநர் பி வாசு வின் மனைவி மனசினக்கரே என்ற படத்தில் இவரது நடிப்பை பார்த்துவிட்டு, சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக இவரை பரிந்துரைத்தார்.
தஸ்கர வீரன், ராப்பகல் என்ற மலையாள படங்களில் நடித்த பிறகு, மீண்டும் தமிழில், ஏ ஆர் முருகதாஸின் கஜினி படத்தில் இரண்டாம் நாயகி ஆக நடித்தார். இந்த படத்தில் X machi Y machi பாடல், இவருக்கு ரசிகர் பட்டாளத்தை கூட்டியது.
வல்லவன், தலைமகன், ஈ போன்ற படங்களுக்கு பிறகு, 2007ல் தல அஜித்துடன் பில்லா திரைப்படத்தில் நயன்தாரா இணைந்தார். இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக உருவெடுத்த நயன், படத்தில் இடம்பெற்ற ஸ்டன்டுகளை டூப் போடாமல் தானே நடித்திருந்தார்.
பாடிகார்ட் என்ற மலையாள படத்தில் திலீப்புடன் இணைந்து நடித்திருந்தார் நயன்தாரா. சந்திரமுகி படத்திற்கு பிறகு, குசேலன் படத்தில் சூப்பர் ஸ்டார் உடனும், ஏகன் படத்தில் அஜித்துடனும் மீண்டும் கைகோர்த்தார் நயன்தாரா.
பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் நயன், ஆர்யா சந்தானத்திற்கு இணையாக காமெடி கலந்த ஒரு ஜாலி ஹீரோயினாக நடித்திருந்தார்
ஆக்ஷன், மாடர்ன், கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நயன்தாரவுக்கு, தெலுங்கில் பலகிருஷ்ணாவுடன் ஸ்ரீ ராம் ராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பலதரப்பட்ட எதிர்ப்புகளை தாண்டி சீதாவாக தோன்றிய நயனுக்கு, படம் வெளியான பிறகு, ரசிகர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடியது. நந்தி, ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் அவ்வருடம் இவர் தட்டிச் சென்றார்
இந்த சமயத்தில் சற்றே பிந்தங்கியிருந்த நயனின் மார்கெட், 2012ல் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் கம் பேக் ஆக அமைந்தது
அதன் பிறகு, மூன்றாவது முறையாக அஜித்துடன் ஆரம்பம் திரைப்படத்தில் இணைந்தார் நயன்தாரா. வழக்கமான 'காதலி' கதாபாத்திரமல்லாமல், தன் குடும்பத்தை அழித்தவர்களை பழிவாங்கும் ஆக்ஷன் நாயகியாக நடித்தார் நயன்தாரா
இந்தி திரைப்படம் கஹானியின் ரீமேக், அனாமிகா மூலம், female centric படங்களை நடிக்க துவங்கினார். அந்த வரிசையில் வந்த அடுத்த படம், மாயா. இந்த படம் இவருக்கு female centric கதைகளில் நடிக்கும் வாய்ப்பை அதிகரித்தது
மாயாவிற்கு பின்னர் டோரா, அறம் திரைப்படங்கள் நயன்தாரா நடித்த Heroine Subjects. கதாநாயகியாக லீட் ரோலில் நடித்தாலும், சோலோ ரோலில் நடித்தாலும், கதையை முன் நகர்த்தும் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார் நயன்தாரா
வேலைக்காரன் படம் மூலம் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நயன்தாரா, மிருநாளினி கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார்
அதன் பின்னர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா ஒரு அப்பாவி கோக் டீலராக நடித்திருந்தார். இந்த படம் இவரது versatality ஐ மெச்சும் சான்றாக அமைந்தது
நானும் ரவுடி தான் திரைப்படத்தில், தொலைந்த தன் தந்தையை தேடும் காதம்பரியாக, காது கேளாதவராக நடித்திருந்தார். தமிழ் திரையுலகம் இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடிவந்த வேளையில், இந்த கதாபாத்திரத்தில் நடித்த நயனுக்கு, stereotypes ஐ உடைத்ததற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
கோலமாவு கோகிலா, நானும் ரவுடி தான் படங்களை தொடர்ந்து, மீண்டும் ஆக்ஷன் சோலோ ஹீரோயினாக, இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடித்தார் நயன்தாரா. தொடர்கொலைகளை செய்துவரும் சைக்கோ கொலைகாரனை பிடிக்கும் சிபிஐ அதிகாரியாக இவர் நடித்திருந்தார்
2019ல் ஐரா, கொலையுதிர் காலம், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தார். விஸ்வாசம், இவர் அஜித்துடன் இணைந்து நடித்த நான்காவது திரைப்படம் ஆகும்
சந்திரமுகி, குசேலன் படங்களுக்கு பிறகு, மீண்டும் தர்பாரில் ரஜினிகாந்த் உடன் நயன்தாரா நடித்திருந்தார்.
அதன் பிறகு வெளிவந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில், முதன் முதலாக 'அம்மன்' ஆக நடித்திருந்தார் நயன்தாரா. ஸ்ரீ ராம ராஜ்ஜியத்துக்கு பிறகு இது இவர் நடித்த டிவோஷனல் ரோல்
தர்பாருக்கு பிறகு, நயன்தாரா மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்
அண்ணாத்த படத்திற்கு பிறகு, நானும் ரவுடி தான் இல் நடித்தது போல, stereotype breakin ரோலில் நடித்த திரைப்படம் நெற்றிக்கண். கண்களை இழந்த பெண்ணாக நடித்திருக்கும் நயன்தாரா, பெண்களை குறிவைத்துகொல்லும் சைக்கோ கொலைகாரனை தேடி பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா.
இத்திரைப்படத்திற்கு பிறகு O2 என்ற படம் ரிலீஸாகவுள்ளது. O2 நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும். இதை தவிர, பிரித்விராஜ் உடன் கோல்ட் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. தமிழில் உதயநிதி ஸ்டாலின், பல முன்னணி மலையாள, தெலுங்கு நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust