Women tilling land canva
இந்தியா

பெண் நிலத்தை உழுதால் பஞ்சம் வரும்: அதிர்ந்து போன அதிகாரிகள் - நீதி கேட்ட இளம் பட்டதாரி

பெண் நிலத்தை உழுதால் அது கடும் பஞ்சத்தையோ அல்லது கொரோனா போன்ற அபாயகரமான பெருந்தொற்றையோ ஏற்படுத்திவிடும், அது கெட்ட சகுனம் என ஊர் பெரியவர்கள் கூறியுள்ளனர்

NewsSense Editorial Team

இந்தியாவில் பல்வேறு மொழி, கலை, இலக்கியம், கலாச்சாரம், மதம், சமய நம்பிக்கைகள் என பல வேற்றுமைகள் கொண்ட நாடு. ஒரு தரப்பினருக்குச் சரி என தோன்றுவது மற்றொரு தரப்புக்கு தவறாக இருக்கலாம். ஆனால் அதை எல்லாம் கடந்துதான் இந்தியா பல தரப்பு மக்களின் சங்கமமாக உலகுக்கே ஒரு புதிய எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து வருகிறது.

இந்தியா செவ்வாய் கிரகத்துக்கே தன் விண்கலத்தை அனுப்பிவிட்டது, ஆனால் இப்போதும் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு விதமான மூடநம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக ஆங்காங்கே செய்திகளில் பார்க்க முடிகிறது.

அப்படி சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் கும்லா மாவட்டத்தில் ஒரு பெண் நிலத்தை உழக் கூடாது என ஊர் பஞ்சாயத்து முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. ஏன் இப்படி ஒரு வித்தியாசமான உத்தரவு என்று கேட்டால்...

பெண் நிலத்தை உழுதால் அது கடும் பஞ்சத்தையோ அல்லது கொரோனா போன்ற அபாயகரமான பெருந்தொற்றையோ ஏற்படுத்திவிடும், அது கெட்ட சகுனம் என ஊர் பெரியவர்கள் கூறியுள்ளனர். எனவே நிலத்தை ஆண்கள் மட்டும்தான் உழ வேண்டும், அது அவர்களுக்கான பணி என்றும் கூறியுள்ளனர்.

என்ன பிரச்னை?

மஞ்சு ஓரன் என்கிற கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் 22 வயது இளம் மாணவி தன் நிலத்தை உழக் கூடாது என தடை விதித்தது அவர் வாழ்ந்து வரும் ஊர் பஞ்சாயத்து. அதோடு அவர் நிலத்தை உழுததற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு அபராதத்தையும் விதிக்க முயன்றது.

விஷயமறிந்த உள்ளூர் அரசு நிர்வாகிகள் சம்பவ இடத்துக்குச் சென்று ஊர் பஞ்சாயத்து பெரியவர்கள் மற்றும் கிராம பெரியவர்களைப் பார்த்து பேசி 'பெண் நிலத்தை உழுதால் பஞ்சம் வரும், கெட்ட சகுனம் என்பது எல்லாம் கட்டுக் கதை' என புரிய வைத்துள்ளனர்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரமாக நடந்த இப்பேச்சு வார்த்தையில் 250 கிராமவாசிகளும் பல உள்ளூர் நிர்வாக அதிகாரிகளும் ஈடுபட்டனர். இதில் காவல் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அப்பேச்சு வார்த்தையில் இந்தியாவின் பல கிராமங்களில் பெண்கள் டிராக்டரைப் பயன்படுத்தி நிலத்தை உழுது குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாக உதவி வருவதாகவும் எடுத்துக் கூறியுள்ளனர். மேலும் வறட்சி போன்ற விஷயங்கள் எல்லாம் எப்படி இயற்கையாக ஏற்படும் விஷயம் என்றும் எடுத்துரைத்து கிராமவாசிகளுக்குத் தெளிவை ஏற்படுத்தினர்.

அதையும் தாண்டி, மஞ்சு ஓரன் நிலத்தை உழுவதை தடுத்தாலோ அல்லது அவரை யாரேனும் நிலத்தில் வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்தாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பிலிருந்தும் கிராமவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் தலையீட்டால் தற்போது மஞ்சு ஓரன் தன் நிலத்தை உழுவதற்கு எந்த தடையும் இல்லை. அவர் விவசாயத் துறையிலேயே வேலை பார்க்க விரும்புவதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையை வெளி உலகுக்குக் கொண்டு வந்து தனக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்க உதவிய ஊடகங்களுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

கல்லூரியில் இளங்கலை சமஸ்கிருதம் படித்துக் கொண்டிருக்கும் மஞ்சு ஓரன், ஒரு முற்போக்கான விவசாயியும் கூட. கடந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலிருந்து விவசாயம் செய்து வருகிறார். விவசாயத்தில் கிடைத்த லாபத்திலிருந்து ஒரு பழைய டிராக்டரை வாங்கி, சிசாய் வட்டத்திலுள்ள தாஹு டோலி என்கிற இடத்தில் அவர் குத்தகைக்கு எடுத்திருக்கும் 10 ஏக்கர் நிலத்தை உழுது காய்கறிகளை பயிரிட உள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?