இந்தியா இந்துக்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஒரு நாடு. இந்துக்கள் அதிகம் என்று சொன்னாலே அங்கு வழிபாடுகள், பாரம்பரியங்கள் இருப்பது வெளிப்படை. அந்த வகையில் இந்தியாவின் கட்டிடக்கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்துக்கு சான்றாக இருப்பது கோவில்கள் தான்.
இதற்கு சான்றாக விளங்கக்கூடிய தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களைப் போல இந்தியா முழுவதும் சிறப்பு வாய்ந்த கோவில்கள் சில இருக்கின்றன
இதில், தங்க முலாம் பூசப்பட்ட பொற்கோவில்கள் தனி ரகம். இந்தியாவில் இரண்டு பெயர்பெற்ற பொற்கோவில்கள் உள்ளன. ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பகுதியிலும், இன்னொன்று தமிழ்நாட்டின் வேலூர் பகுதியிலும் அமைந்துள்ளது.
பஞ்சாபில் உள்ள புனித அம்ரித்சர் ஏரியின் பெயர் தான் இந்த இடத்திற்கு அமிர்தசரஸ் என்று பெயர் வைக்க காரணமாகும்.
'ஸ்ரீ ஹரமந்திர் சாஹிப் குருத்வாரா' என்று அழைக்கப்படும் அமிர்தசரஸ் கோவில் சீக்கியர்களின் புனிதத்தலமாக கருதப்படுகிறது.
சீக்கியர்களின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் சான்றாக இருக்கும் இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
பொற்கோவில் அமைந்துள்ள புனித அம்ரித்சர் ஏரி, சீக்கியர்களின் நான்காவது குருவான குரு ராம் தாஸ் கட்டியதாகவும், பின்னர் புனித நீரால் நிரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏரியின் நடுவில் இருக்கும் பாலத்தை பயன்படுத்தி தான் இந்த கோவிலுக்கு செல்ல முடியும். இந்த கோவிலில் சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்தம் பாதுகாக்கப்படுகிறது.
இங்கு பார்வையளர்களை கவரும் வகையில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தின் மேல் தளம் 400 கிலோ தங்கத்தால் கட்டப்பட்டது.
மேலும், பொற்கோவிலின் பிரதான நுழைவாயிலில் விக்டோரியன் காலத்தில் உருவாக்கப்பட்ட கடிகார கோபுரம் ஒன்று உள்ளது.
இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்படுகிறதாம்.
'லங்கர்' என்று சொல்லக்கூடிய உணவகத்தில் கொடுக்கப்படும் சப்பாத்தி மற்றும் ரொட்டியை சுற்றுலா பயணிகள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
தென் இந்தியாவில் அமைந்துள்ள ஒரே பொற்கோவில் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ளது.
'ஸ்ரீ புரம்' பொற்கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோவிலின் உள் மற்றும் வெளிப்புறத்தில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
இந்த கோவில் சுமார் 1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்டுள்ளதாம். மகாலட்சுமி இக்கோவிலின் பிரதானமான கடவுளாக பார்க்கப்படுகிறார்
மற்றபடி, இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முறையான ஆடைகட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
அதே போல கோவிலுக்குள் செல்போன், கேமரா உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust