Scissors Canva
இந்தியா

5 வருடங்களாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் - என்ன நடந்தது?

ஐந்து வருடங்களாக விடாமல் வயிற்று வலியால் அவர் பாதிக்கப்பட்டு வந்ததால், மீண்டும் மருத்துவர்கள் உதவியை நாடியுள்ளார் ஹர்ஷினா.

Keerthanaa R

5 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்திரிக்கோலை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றியுள்ளனர் மருத்துவர்கள்

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷினா. இவர் கோழிக்கோட்டில் உள்ள மருத்தவமனைக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பிரசவத்திற்காக சென்றுள்ளார். சிசேரியன் மூலமாக குழந்தை பெற்றெடுத்துள்ளார் ஹர்ஷினா.

சில நாட்களிலேயே அதிக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் ஹர்ஷினா. பல முறை மருத்துவர்களை அணுகியும், சிகிச்சைகள் மேற்கொண்டும், அவை பலனளிக்கவில்லை.

ஐந்து வருடங்களாக விடாமல் வயிற்று வலியால் அவர் பாதிக்கப்பட்டு வந்ததால், மீண்டும் மருத்துவர்கள் உதவியை நாடியுள்ளார் ஹர்ஷினா. அப்போது சிடி ஸ்கேன் எடுத்துள்ளனர்.

அப்போது அவரது ஸ்கேன் ரிப்போர்ட்டில், ஹர்ஷினாவின் வயிற்றுக்குள் உலோகப் பொருள் ஏதோ இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அது கத்திரிக்கோல் என தெரிந்த பின்னர் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றபோது மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் கவனக்குறைவாக அந்த பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டது. மருத்துவர்களின் அலட்சியத்தால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் வீணாவிடம் புகார் எழுப்பியுள்ளார் ஹர்ஷினா.

இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது விசாரணை நடத்தக் கோரி சுகாதாரத் துறை அமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?