உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  Twitter
தமிழ்நாடு

"மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது” - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Priyadharshini R

திருமணம் ஆன பிறகு பெண்களின் வாழ்க்கை முறையே மாறிவிடும். பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு பல சவால்கள் காத்திருக்கும். கணவர் வீட்டாரை புரிந்துக்கொள்ளுதல், உறவினர்களுடனான அனுசரிப்பு என அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஒரு சில வீடுகளில் கணவரின் பெற்றோர் அதாவது மாமனார், மாமியார் நன்றாக அமைந்துவிடுவார்கள். சிலருக்கு ஏழாம் பொருத்தம், மாமியார் மருமகள் இடையே சண்டை ஓயாது.

marriage

அப்படி வந்த சண்டையில் மருமகளை வீட்டை வீட்டு வெளியே செல்ல கணவரின் குடும்பத்தார் கூறியதையடுத்து, அந்த பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். மதுரையைச் சேர்ந்த காயத்ரி என்பவர் தொடர்ந்த வழக்கில் மாமனார், மாமியாரை துன்புறுத்தியதாக கூறி மருமகளை வீட்டை வீட்டு வெளியேற்ற முடியாது என்றும் மருமகள் மீது முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Law

அண்மையில் விவாகரத்து பெற்ற பின்பு பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுப்பது சரியானது. அதே நேரத்தில் விவாகரத்து ஆன பின்பு திருமணத்தின் போது பெண் வீட்டார் கொடுத்த சீதனத்திற்குக் கணவர் குடும்பத்தினர் உரிமை கொண்டாட முடியாது என்று பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?