கோபத்தில் எதிராளியின் மூக்கை கடித்த நபர்  டிவிட்டர்
உலகம்

கோபத்தில் எதிராளியின் மூக்கை கடித்த நபர் - என்ன காரணம்?

சில சமயங்களில் வினோதமான தாக்குதல்களும் நடக்கும். அப்படித்தான் இங்கும் ஒருவர் சண்டையின்போது எதிராளியின் மூக்கை கடித்துள்ளார்.

Keerthanaa R

Beyond Meat என்ற வீகன் உணவு நிறுவனத்தின் COO வாக்குவாதத்தின்போது ஒருவரின் மூக்கை கடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சண்டைகள், கைகலப்புகளில் ஈடுபடுபவர்களுக்குக் காயங்கள் ஏற்படுவது வழக்கம் தான். சில சமயம் அது கொலையாக கூட மாறியிருக்கிறது. ஆனால், சமயங்களில் வினோதமான தாக்குதல்களும் நடக்கும். அப்படித்தான் இங்கும் ஒருவர் சண்டையின்போது எதிராளியின் மூக்கை கடித்துள்ளார்

டக் ராம்ஸே என்பவர் Beyond Meat என்ற வீகன் உணவு நிறுவனத்தின் COOவாக பணியாற்றி வருகிறார். இவர்  ஆர்கன்சாஸ் பல்கலைக்கழக கால்பந்து விளையாட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு ரேசர்பேக் ஸ்டேடியத்திற்கு அருகிலுள்ள பார்க்கிங்கில் அவரது காரை நிறுத்தியுள்ளார்.  அப்போது மற்றொருவர் இவரது வாகனத்தின் மீது உரசியதாக தெரிகிறது. இதில் ராம்ஸேவின் காரின் மீது சிறிய கீறல்கள் ஏற்பட்டதால் அவர் கோபமடைந்துள்ளார். 

மேலும், உரசிய காரின் விண்ட்ஷீல்டை முதலில் தாக்கியுள்ளார். கார் ஓட்டுநரையும் வெளியில் வரவழைத்து அவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார் ராம்ஸே. ஒரு கட்டத்தில் கோபமடைந்து அவரின் மூக்கை கடித்துவிட்டர் ராம்ஸே. காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

பாதிக்கப்பட்டவர் ராம்ஸே மீது புகாரளித்தார். மேலும் தன்னை கொலை செய்துவிடுவதாக ராம்ஸே மிரட்டியதாகவும் அவர் தெரிவித்தார். ராம்ஸேவை கைது செய்து விசாரித்து வருகிறது காவல்துறை 

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?