Stress ஏற்பட்டால் செடிகள் அழுமா? வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு - புதிய ஆய்வு சொல்வதென்ன? ட்விட்டர்
உலகம்

Stress ஏற்பட்டால் செடிகள் அழுமா? வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு - புதிய ஆய்வு சொல்வதென்ன?

அழுகை என்ற உணர்வு தான் பூமியில் இருக்கும் பல்வேறு வகையான உயிரினங்களை நம்மிடம் வேறுபடுத்துகிறது என்று சொன்னால் அது மிகையல்ல. ஆனால், இங்கு செடிகளும் கூட அழும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றனர். எப்படி? இந்த பதிவில் காணலாம்

Keerthanaa R

அழுத்தம் அதிகமாகும்போது செடிகள், தாவரங்கள் அழும் எனவும், அந்த சமயத்தில் அவை அலறும் சத்ததைக் கூட கேட்க முடியும் என புதிய ஆராய்ச்சி ஒன்றில் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.

மன வருத்தங்கள், அழுத்தங்கள் அதிகமாகும் போது மனிதர்கள் அழுவதுண்டு. விலங்குகளும் அழும் என நாம் அறிவோம். அழுகை என்ற உணர்வு தான் பூமியில் இருக்கும் பல்வேறு வகையான உயிரினங்களை நம்மிடம் வேறுபடுத்துகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

ஆனால், இங்கு செடிகளும் கூட அழும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றனர். எப்படி? இந்த பதிவில் காணலாம்

இஸ்ரேலிலுள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதில், பல்வேறு செடிகள் பல்வேறு விதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. உதாரணத்திற்கு தக்காளி மற்றும் புகையிலை செடிகள், அறுபடும்போது அல்லது தேவையான அளவு தண்ணீர் வழங்காதபோது அழுதது என கூறப்படுகிறது.

"அழுத்தம், அதிகமாக இருக்கும் சமயங்களில் செடிகள் அழுகின்றன, மற்றும் ஒவ்வொரு விதமான வலிக்கும் அவை ஒரு ஒரு விதமான சத்ததை எழுப்புகின்றன. இவை மனித காதுகளுக்கு கேட்காமல் இருக்கலாம் ஆனால், வவ்வால், எலிகள் பூச்சிகளுக்கு இந்த ஓசை கேட்கிறது" என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனித செவிகளுக்கு 16 கிலோ ஹெர்ட்ஸ் சத்தத்தை (அதிர்வெண்களை) மட்டுமே கேட்கும் திறன் உள்ளது.

இந்த ஆராய்ச்சிக்காக செடிகளின் அருகில், 20 முதல் 250 கிலோ ஹெர்ட்ஸ் அதிர்வெண் சத்ததை பதிவு செய்யக்கூடிய மைக்ரோஃபோன்கள் 10 சென்டிமீட்டர் தூரத்தில் வைக்கப்பட்டன.

அப்போது செடிகளிலிருந்து 40 முதல் 80 கிலோ ஹெர்ட்ஸ் வரை சத்தம் எழுந்ததாகவும், அவை அந்த மைக்ரோஃபோனில் பதிவானதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, பதிவு செய்யப்பட்ட தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதனை வைத்து ஆராய்ச்சியாளர்கள், எந்த சத்தம் எந்த செடியில் இருந்து வந்தது என்பதை வகைப்படுத்தியுள்ளனர்.

"நம்மைச் சுற்றி எல்லா செடிகளுக்குள்ளும் ஒரு விதமான ஓசை ஒளிந்திருப்பதை எங்களது ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு தனி பொருளும் இருக்கிறது. தண்ணீரின் தேவை, காற்று, அல்லது காயங்கள் என வகைப்படுத்தலாம்" என்கிறார் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் கணிதவியலாளர் லிலாக் ஹடானி சிபிஎஸ்ஸிடம் தெரிவித்தார்.

இந்த புதிய கண்டுபிடிப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் முக்கியமாக, பல ஆண்டுகளாக செடிகளில் ஓசை ஒளிந்திருக்கிறதா என்ற விஞ்ஞானிகளின் கேள்விகளுக்கும் இது விடையளிக்கிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?