AR Rahman : இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் குறித்த 10 சுவாரஸ்ய உண்மைகள்

Priyadharshini R

அவரின் இயற்பெயர் ஏ ஆர் ரஹ்மான் இல்லை. இந்துக் குடும்பத்தில் திலீப் குமாராகப் பிறந்தார். 23 வயதில், மதம் மாறி இஸ்லாத்தைத் தழுவும் முடிவை எடுத்தார். அவர் தனது ஆன்மீக குருவான சூஃபி துறவி காத்ரி இஸ்லாமைச் சந்தித்த உடனேயே இந்த மனமாற்றம் அவருக்கு ஏற்பட்டது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையை ஒரு தொழிலாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக ரஹ்மானின் தந்தை ஆர் கே சேகர் மலையாள திரை உலகில் மூத்த இசையமைப்பாளராவார். தனது 9 வயதில் தந்தை மரணம் அடைந்த பிறகு இசைக்கருவிகளை வாடகைக்கு எடுத்து அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கையை நகர்த்தியது ரஹ்மான் குடும்பம்.

ரஹ்மானின் சுயசரிதை notes of a dream என்ற பேரில் புத்தகமாக உள்ளது. அந்நூலில் தன் இளமைக்கால வாழ்க்கை கஷ்டம் நிறைந்ததாக இருந்தது என்றும் தந்தையின் மரணத்திற்கு பிறகு வாழ்க்கை வெறுமையாகியது எனவும் 25 வயது வரை தனக்குள் தற்கொலை எண்ணங்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் ரஹ்மான்

ஆரம்ப காலங்களில் மூத்த இசையமைப்பாளர்கள் எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றியவர். பின்னர் விளம்பர படங்களுக்கு டியூன் போட்டுக் கொடுத்தார் ரஹ்மான்.

அதன் பிறகு மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992 ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களுக்கு மட்டுமின்றி ஆங்கிலம், சீன மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார் ஏ ஆர் ரகுமான்

ஸ்லம்டாக் மில்லியினர் திரைப்படத்திற்காக உலக அளவில் திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

ரோஜாவுக்கு கிடைத்த தேசிய விருது முதல் இதுவரை ரஹ்மான் பெற்ற விருதுகளின் பட்டியல் நீண்டு கொண்டிருக்கும். ஆறு தேசிய விருதுகள், 32 பிலிம்ஃபார் விருதுகள், 2 ஆஸ்கர் விருதுகள் என சர்வதேச அளவில் இசைக்காக வழங்கப்படும் எண்ணற்ற விருதுகளை இசையமைப்பாளர் பெற்றுள்ளார்.

திரையுலகில் 27 வருடங்களுக்கு மேலாக இசையமைப்பாளராக வலம் வந்தாலும் ரஹ்மான் முதல் முதலாக வெள்ளித்திறையில் முகம் காட்டியது பிகில் படத்தில் இடம்பெற்ற சிங்கப் பெண்ணே பாடலில் தான்.

பொதுவாக இரவு நேரத்தில் தான் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராம். அதற்கு காரணம், அமைதியான சூழல் இரவு நேரங்களில் கிடைப்பதால் அந்த நேரத்தை தேர்வு செய்வதாக தனது சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ளார்