மடோனா செபஸ்டியன் குறித்த 10 விஷயங்கள் - பிறந்தநாள் பகிர்வு | Visual Story

Antony Ajay R

2015ம் ஆண்டு பிரேமம் படத்தின் மூன்று கதாநாயகிகளும் நல்ல வரவேற்பைப் பெற்றனர். அதில் ஐஸ்க்ரீம் சாப்பிடும் சீனுக்காக அறியப்பட்டவர் மடோனா!

கேரளாவின் கன்னூரில் பிறந்த இவர் அங்கமாலியில் வளர்ந்தார். பெங்களூருவில் கல்லூரி படிப்பை முடித்தார்.

விஜய் சேதுபதியுடன் நடித்த காதலும் கடந்து போகும் இவருக்கும் தமிழில் முதல் படமாக அமைந்தது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் இதுவரை 14க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்

சிறுவயதிலிருந்து பாடுவதிலும் அதிக ஆர்வமுள்ளவர் மடோனா. Ever After எனும் பிராண்ட் வழியாக பாடல்கள் பாடியிருக்கிறார்.

தனுஷ் இயக்கிய பவர் பாண்டி மற்றும் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் கவண் போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் இவர் நடித்த வைரஸ் படத்தில் தனித்துவமான கதாபாத்திரத்தின் மூலம் பாராட்டுகளைப் பெற்றார்.

மடோனா கன்னடத்தில் முதன்முதலாக கொட்டிகொப்பா படத்தின் மூலம் 2021 -ல் அறிமுகமானார்.

2021ல் அவர் நடித்த சியாம் சிங்கா ராய் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

கடந்த ஜனவரி மாதம் வெளியான கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசி குமாருடன் இணைந்து நடித்திருந்தார் மடோனா.