த்ரிஷா : ”கரு கரு கண்களால் கயல்விழி கொல்கிறாள்” - 20 Years of Trisha| Visual Story

Keerthanaa R

சென்னையில் பிறந்த த்ரிஷா கிருஷ்ணன், சேக்ரட் ஹார்ட்ஸ் பள்ளியில் படித்தார்,. இவர் ஒரு பிபிஏ பட்டதாரி

1999ல் மிஸ் சென்னை பட்டம் வென்றார் த்ரிஷா. இதை தவிர மிஸ் சேலம், மிஸ் இந்தியா 2001ல் Beautiful Smile என்ற விருதையும் வென்றார். இதனை தொடர்ந்து ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் நடித்திருந்தார்

அதன் பின்னர் 1999ல் வெளியான ஜோடி திரைப்படத்தில், சிம்ரனின் தோழியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்

2002ல் வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் கதானாயகியாக அறிமுகமானார் த்ரிஷா

தமிழ் தவிர, இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் கதானாயகியாக நடித்துள்ளார் த்ரிஷா

கன்னடத்தில் நடிகர் புனீத் ராஜ்குமாருடன் இணைந்து பவர் என்ற படத்தில் நடித்தார் த்ரிஷா. அவர் நடித்த ஒரே கன்னட படம் அது தான்

ஹே ஜூட் என்ற திரைப்படம் மூலம் மலையாளத்தில் 2018ல் கால்பதித்தார் த்ரிஷா.

த்ரிஷா தன் தாயுடன் ஆங்கிலத்தில் மட்டும் தான் பேசுவார் என்று சொல்கிறது பிசினஸ் அப் ட்ர்ன் செய்தி தளம்

ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் அதில் நடிக்கவில்லை.

தமிழ் திரையுலகில் அனைத்து முன்னணி கதானாயகர்களுடனும் த்ரிஷா நடித்திருக்கிறார்

சந்தியாவாக அறிமுகமான த்ரிஷா, ரசிகர்கள் மனதில் ஜெஸ்ஸி, ஜானு, குந்தவையாக நீங்கா இடம் பிடித்துள்ளார்