Antony Ajay R
பாலிவுட் இண்ட்ஸ்ட்ரியில் ஏதாவது சின்ன வேடத்தில் தோன்றிக் கூட உள் நுழைந்துவிட்டால் போதும் என எல்லா ஹீரோயின்களும் எண்ணுவர். ஆனால் நயன்தாரா 2013ம் ஆண்டு ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பை மறுத்துவிட்டார். அப்போது பலரும் அதை தவறான முடிவாக கருதினர். இப்போது ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜாவான் படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமாகிறார்.
"நோ சொல்ல கத்துக்கங்க"
நயன்தாரா ஒரு நடிகை என்பதைத் தாண்டி இரண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஒன்று அவரது கணவருடன் தொடங்கிய ரௌடி பிக்சர்ஸ். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கூழாங்கல், நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளனர். மற்றொன்று லிப் பாம் நிறுவனம். டாக்டர். ரெனிட்டா ராஜனுடன் சேர்ந்து இதனை நிறுவினார்.
2003ம் ஆண்டு சினிமா பயணத்தைத் தொடங்கிய நயன்தாரா 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த 19 ஆண்டுகளில் அனைத்து தென்னிந்திய திரைத்துறைகளிலும் முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார். இப்போது ஜாவான் மூலம் இந்தியிலும் காலடி எடுத்து வைக்கிறார். தென்னிந்தியாவின் எல்லா சூப்பர் ஸ்டார்களுடனும் இணைந்து நடித்தவர் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது.
நயன்தாரா ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் என்பதை நாம் அறிவோம். ஆனால் தனது கெரியரிலேயே திருப்திகரமான படமாக நயன்தாரா எண்ணுவது ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தைத் தான். 2011ம் ஆண்டு நவம்பரில் இந்த படம் திரையரங்குகளில் வெற்றி நடையைத் தொடங்கியது. அதே ஆண்டு ஆகஸ்டில் தான் நயன்தாரா இந்துவாக மதம் மாறினார்.
சிறந்த நடிகையாக 5 முறை ஃபிலிம் ஃபேர் விருது பெற்றுள்ளார். 3 முறை தமிழிலும் 1 முறை தெலுங்கு மற்றும் மலையாளத்தில் 1 முறை என்பது குறிப்பிடத்தக்கது.