Actor Arjun to direct daughter Aishwarya Arjun| Visual Story

Antony Ajay R

தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகிறார் நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன்

முன்னதாக 'பட்டத்து யானை' படத்தில் விஷாலுடன் நடித்திருந்தார் ஐஸ்வர்யா. பின்னர் கன்னடத்தில் 'ப்ரேம பரஹா', தமிழில் 'சொல்லிவிடவா' போன்ற படங்களில் நடித்திருந்தார்

ஆனால் ஐஸ்வர்யாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை

இப்போது தந்தை அர்ஜுன் இயக்கவுள்ள ஒரு தெலுங்கு படத்தில் ஐஸ்வர்யா நடிக்கவுள்ளார் என செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.

அர்ஜுன் முன்னதாக தமிழில் வேதம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

அர்ஜுன் மற்றும் அவரது மகள் இணையும் படம் குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பத்துடன் அர்ஜுன்