Actress Anikha Surendran is a pregnant teenager in her next| Astounding Pics| Visual Story

Antony Ajay R

அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாள திரைத்துறைகளில் பணியாற்றியவர்.

மலையாளத்தில் Katha Thudarunnu படத்தின் மூலம் அறிமுகமான இவர் பேபி அனிகா என்று அழைக்கப்பட்டார்.

மலையாளத்தில் நயனா, ஒன்னுமிடத்தே உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

தமிழிலில் முன்னணி நாயகராக வலம் வரும் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தார்.

அஜித் படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற அனிகாவின் "மா" என்ற குறும்படமும் அதிக பாராட்டுகளைப் பெற்றது.

சமீபத்தில் வைரமுத்துவின் நாட்டு பன் தேரலில் என் காதலா என்ற பாடலில் நடித்திருந்தார். அனிகா இந்த பாடலால் கொஞ்சம் சர்ச்சையும் ஏற்பட்டது.

இரவும் பறக்கலாம் என்ற இவரது பாடல் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பைப்பெற்றது.

படங்கள், பாடல்கள் மட்டுமின்றி சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டார் அனிகா.

இன்ஸ்டாகிராமில் இவருக்கு 16 லட்சத்துக்கும் அதிகமான ஃபாளோவர்கள் உள்ளனர்.

17 வயது நடிகையான அனிகா வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் கர்ப்பமான பெண்ணாக நடிக்கிறார்.

இந்த படத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். மணி நாகராஜ் என்பவர் இயக்க, விஜய் டிவி கோபிநாத் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.