கார்த்தி,சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களுடன் இணையும் அதிதி சங்கர் |Visual Story

Priyadharshini R

இயக்குநர் சங்கரின் இளைய மகள் அதிதி, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

இயக்குநர் முத்தையா இயக்கியுள்ள விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.

அதிதி நடிக்க உள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவாக உள்ள மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் அதிதி.

நடிகை அதிதி ஷங்கர் அடுத்தடுத்து கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறார்.

மாவீரன் படத்தில் அதிதி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இப்படத்தைத் தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் நடிகை அதிதி சங்கர் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருந்தார்.

நடிகை அதிதி சங்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 175,000 ஃபாலோவர்களை கொண்டுள்ளார்.