ஐஸ்வர்யா லக்ஷ்மி: பூங்குழலி குறித்த இந்த தகவல்கள் தெரியுமா? | Visual Story

Keerthanaa R

செப்டம்பர் 6 1990ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்தவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி

இவர் Njandukalude Nattil Oridavela என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்

பள்ளிப்படிப்பை, திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய இடங்களில் முடித்துவிட்டு, ஸ்ரீ நாராயணா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ், எர்ணாகுளத்தில் மருத்துவம் படித்தார்

2014 ஆம் ஆண்டு முதல் மாடலிங் செய்து வருகிறார் ஐஸ்வர்யா லக்ஷ்மி

செம்மனூர் ஜுவல்லர்ஸ், ஸ்ரீ லக்ஷ்மி ஜுவல்லர்ஸ் உள்ளிட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார்

மாயநதி, வரத்தன், விஜய் சூப்பரும் பௌர்ணமியும் உள்ளிட்ட படங்கள் மூலம் கதாநாயகியாக பிரபலமடைந்தார்

விஷால் நடித்த ஆக்‌ஷன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ஐஸ்வர்யா

அதன் பிறகு தனுஷுடன் இணைந்து ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார்

2022ஆம் ஆண்டு, பிரம்மாண்ட படைப்பில் வெளியான மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில், முக்கிய கதாபாத்திரமான பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்தார்