Antony Ajay R
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். பைக் ரைடில் ஆர்வம் உள்ளவர் என்பது நமக்குத் தெரியும்.
சமீபத்தில் இமயமலைப் பகுதியில் தனது குழு மற்றும் நடிகை மஞ்சு வாரியருடன் பயணம் செய்திருக்கிறார் அஜித்.
ஏகே61 திரைப்படத்தில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கின்றனர்.
இமயமலையின் கரடு முரடான பகுதியில் இவர்கள் இணைந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
’சூப்பர் ஸ்டார் பைக் ரைடர் அஜித் சாருக்கு நன்றிகள். என் முதல் பைக் ரைடுக்காக அட்வன்சர் ரைடர்ஸ் இந்தியா குழுவில் இணைந்ததற்காக பெருமை படுகிறேன்’என தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியுள்ளார் மஞ்சு.
இந்த ரைடுக்கு பிறகு ஏகே 61 படத்தின் டப்பிங் பணிகள் நடக்கும் என்று கூறப்படுகிறது.