Priyadharshini R
தென்னிந்திய சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவர் ஆண்ட்ரியா.
நடிகை, பின்னணி பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட் என பல முகங்களை காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் ஆண்ட்ரியா.
2005ம் ஆண்டு வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இவரை நடிகையாக உயர்த்தின.
எங்கடி பொறந்த - வணக்கம் சென்னை, ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா - புஷ்பா தி ரைஸ், உன்மேல ஆசை தான் - ஆயிரத்தில் ஒருவன், இதுவரை - கோவா போன்ற ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
சென்னை அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்த இவர் நுங்கம்பாக்கத்திலுள்ள கிறித்தவக் கல்லூரியில் படித்துள்ளார். இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.
ஆண்ட்ரியாவுக்கு வுமன் சென்ட்ரிக் படங்களில் நடிக்க மிகவும் விருப்பப்படுவதாக அவரே நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்
சைலேஷ் கொளனு இயக்கத்தில், வெங்கடேஷ் மற்றும் நவாசுதீன் சித்திக் நடிப்பில் உருவாகியுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.
இயக்குநர் அழகு கார்த்திக் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் ஜானரில் உருவாகும் 'நோ என்ட்ரி' படத்தில் லீட் ரோலிலும் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.