BigBoss Shivani Narayanan signs her Next with Vijay Sethupathi after Vikram | Visual Story

Antony Ajay R

சின்னத்திரை நட்சத்திரமாக தனது திரை பயணத்தைத் தொடங்கியவர் ஷிவானி நாராயணன்.

சரவணன் மீனாட்சி, பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 2020 -ம் ஆண்டு விஜய் டிவி -யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெரும் புகழடைந்தார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி வெள்ளித்திரையில் தற்போது நடித்து வருகிறார்.

இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருந்த ஷிவானி தனக்கென ரசிகர்களையும் சம்பாதித்துக்கொண்டார்.

விக்ரம் படத்தில் கமல் மட்டுமின்றி விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் போன்ற நடிகர்களும் இடம் பெற்றிருந்தனர்.

விக்ரமில் விஜய்சேதுபதி ஏற்ற சந்தனம் கதாப்பாத்திரத்தின் மனைவியாக நடித்த ஷிவானி, அவருடன் மற்றொரு படத்திலும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பொன்ராம் இயக்கும் இந்த படம் குறித்து ஷிவானி கடந்த ஜனவரி மாதம் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டார். அதில் அவர் காவல்துறை உடையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கேரளா லாட்டரியை முன்வைத்து எடுக்கப்படும் பம்பர் என்ற படத்திலும் ஷிவானி ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.