தனுஷ் : நடிகர் டு இயக்குநர் - அசுர நடிப்பால் உயர்ந்த சிகரம் | Visual Story

Priyadharshini R

திரைப்பட நடிகர்

2002 ஆம் ஆண்டு செல்வ ராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு தனுஷ் அறிமுகமானார். காதல் கொண்டேன் தொடங்கி பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், கர்ணன் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். திருச்சிற்றம்பலம்,வாத்தி ரீலீஸுக்கு காத்திருக்கிறது.

பின்னணிப் பாடகர்

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் இடம்பெற்ற "நாட்டு சரக்கு" பாடலை முதலில் தனுஷ் பாடினார். "வொய் திஸ் கொலவெறி டி", "கண்ணழகா", "வென்பனிமலரே", "ரவுடி பேபி", "கண்ணழகு ரத்தினமே" போன்ற ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் தனுஷ்

திரைப்படத் தயாரிப்பாளர்

3 திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான தனுஷ், எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, வட சென்னை ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார்.

திரைப்படப் பாடலாசிரியர்

மயக்கம் என்ன படத்தில் இடம்பெற்ற ”காதல் என் காதல்” என்ற பாட்டுக்கு பாடல் வரி எழுதியுள்ளார். பின்னர் வொய் திஸ் கொலவெறி டி, பூமி என்ன சுத்துது, ஊதுங்கடா சங்கு, கண்ணழகா, வென்பனிமலரே உள்ளிட்ட ஹிட் பாடல்களுக்கு வரி எழுதியுள்ளார் தனுஷ்.

Silverscreen Inc.

திரைப்பட இயக்குநர்

2017 ஆம் ஆண்டு வெளியான ப. பாண்டி திரைப்படத்தை தனுஷ் இயக்கி இயக்குநராகவும் அறிமுகமானார்.