Dulquer Salmaan : 10 Master Piece Movies of South Indian Actor

Antony Ajay R

Charlie திரைப்படத்தில் துல்கர் பார்வதி உள்ளிட்டோர் நடித்திருப்பர். மலையாளத்தில் இளைஞர்களை பெருமளவில் ஈர்த்த இந்த திரைப்படம் தமிழில் "மாறா" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

Hotel - துல்கர் சல்மான் நித்யா மேனன் நடித்த இந்த திரைப்படத்தில் கனவை துரத்தும் பெண்ணாக நித்யா மேனன் நடித்திருப்பார். பெண் மைய படமாக பார்க்கப்பட்டாலும் அதில் தனது பங்கை சிறப்பாக நிறைவேற்றியிருப்பார் துல்கர்.

Banglore Days - நஸ்ரியா, நிவின் பாலியுடன் துல்கரும் இணைந்து நடித்த துள்ளலான திரைப்படம் பெங்களூர் டேஸ்.

kali - சாய் பல்லவி மற்றும் துல்கர் நடித்த கலி, முன்கோபம் கொள்ளும் இளைஞனின் வாழ்வை பேசுவதாக அமைந்திருக்கும். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களாலும் இந்த படம் பரவலாக பேசப்பட்டது.

Parava கொச்சி மக்களின் வாழ்க்கை சூழலின் வழியாக இரன்டு சிறுவர்களின் கனவைப் பேசும் படம்.

100 Days of Love துல்கர் மற்றும் நித்யா மேனன் நடித்த இந்த படம் வித்தியாசமான வகையில் காதலைப் பேசக்கூடியது.

Vikramadithyan - ஒரு திருடனின் மகனான துல்கர் சல்மான் போலீஸ் அதிகாரியாகிறாரா இல்லையா என்ற சுவாரஸ்ய கேள்வியுடன் நகரும் திரைப்படம் விக்ரமாதித்யன்.

Oh Kadhal Kanmani - துல்கர் மற்றும் நித்யா மேனன் நடித்த மற்றுமொரு காதல் திரைப்படம் ஓ காதல் கண்மணி. தமிழ் மற்றும் மலையாளத்தில் சக்க போடு போட்ட காதல் திரைப்படம் இது. இதனை முன்னணி இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருப்பார்.

CIA - காதலிக்காக சட்ட விரோதமாக எல்லையைத் தாண்டும் காதலனாக இதில் நடித்திருப்பார் துல்கர்.

Solo - ஒரு ஆந்தாலஜி படத்தி அத்தனை கதைகளிலும் ஒரே நபர் நாயகனாக நடிக்கும் சவாலான சம்பவத்தை செய்து அசத்தியிருப்பார் துல்கர்.