HBD Madhavan: Things to Know about Ever Charming Maddy | Visual Story

Antony Ajay R

மாதவன் பிறந்து வளர்ந்தது பீகாரில். இப்போது மும்பையில் வசிக்கிறார்.

இந்தியில் சில சீரியல்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வந்தவர். மணிரத்னத்தின் அலைபாயுதே மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மின்னலே, ஜேஜே படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம்வந்தார். அப்போதைய கல்லூரிப் பெண்களுக்கு மாதவன் தான் கிரஷ்.

காதல் மட்டுமின்றி ஆர்யா, ரெண்டு, ஆயுத எழுத்து போன்ற ஆக்‌ஷன் படங்களிலும் நடித்துள்ளார்.

குரு என் ஆளு, மன்மதன் அம்பு, வேட்டை, 3 இடியட்ஸ், அன்பே சிவம் போன்ற டபுள் ஹீரோ, ட்ரிபில் ஹீரோ படத்தில் கூட வசீகரமான நடிப்பால் ஸ்கோர் செய்வார் மாதவன்.

பல வருடங்கள் கழித்து மாதவன் தனது உடல் மொழியை மாற்றிக் கொண்டு இறுதிச் சுற்றுப் படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

விக்ரம் வேதா, மாறா போன்ற படங்களைக் கொடுத்து அசத்தி வருகிறார் மாதவன்.

இப்போது 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' எனும் படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது.

'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படத்தில் மாதவனே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்ரன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் ஷாருக்கான் கேமியோ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

HBD Ever Charming Maddy