Keerthanaa R
துள்ளுவதோ இளமையில் அறிமுகமான நடிகர் தனுஷ், தமிழ் மட்டுமல்லாது பாலிவுட் திரைத்துறையிலும் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றுள்ளார். தனுஷ் மொத்தம் நான்கு தேசிய விருதுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Student of the Year படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான ஆலியா பட், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவரது வுமன் சென்ட்ரிக் திரைப்படங்கள் இந்திய அளவில் புகழை தேடிக் கொடுத்தது.
1994ல் உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், தமிழ் மற்றும் இந்தி திரைத்துறையில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான நந்தினி ரோலில் அசத்தியிருந்தார் ஐஸ்வர்யா ராய்.
2013ல் இருந்து ஃபோர்ப்ஸ் இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்று வரும் ராம் சரண் தேஜா, இதுவரை மூன்று ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார்
தெலுங்கு, தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. மாஸ்கோவின் காவிரி படம் மூலம் அறிமுகமானார். சமீபத்தில், மயோசிடிஸ் எனும் அறியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான ஹ்ரித்திக் ரோஷன், ஈஸ்டர்ன் ஐ இதழின் 50 கவர்ச்சியான ஆசிய ஆண்களின் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம் எஸ் தோனி படத்தில் கிரிக்கெட்டர் தோனியின் மனைவி சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்தார் கியாரா அத்வானி. இந்தி, தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் இவர் ஷேர்ஷா, கபீர் சிங் ஆகிய படங்கள் மூலம் அதிக பிரபலமடைந்தார்
ஜூனியர் என்.டி.ஆர் என்று அழைக்கப்படும் நந்தமுரி தாரக ராமராவ் ஜூனியர் முன்னணி தெலுங்கு நடிகர்களில் ஒருவர். இவர் இரண்டு ஃபிலிம்பேர் விருதுகள், இரண்டு மாநில நந்தி விருதுகள் மற்றும் நான்கு CineMAA விருதுகளை வென்றுள்ளார்.
தெலுங்கு திரைத்துறையில் கலக்கி வரும் அல்லு அர்ஜுன், அவரது நடன திறமைக்காக இந்தியா முழுக்க பிரபலமடைந்தார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் திரைப்படம், இவருக்கு பான் இந்தியா அந்தஸ்த்தை பெற்று தந்தது.
கன்னட திரைத்துறையில் பிரபலமான நடிகர் யாஷ். இவரது கேஜிஎஃப் திரைப்படம், இந்திய அளவில் புகழ்பெற்றிருந்தது. கேஜிஎஃப் படங்களுக்காக வேறு எந்த படத்திலும் யாஷ் கமிட்டாகவில்லை என்பது வட்டாரங்கள் சொல்லும் தகவல்!