Keerthanaa R
நடிகர் மாதவன் ஜூன் 1, 1970ல் பீகாரில் பிறந்தவர். தமிழ் குடும்பத்தை சேர்ந்த மாதவன், ஜம்ஷெத்பூரில் பிறந்து வளர்ந்தார்.
நடிகர் மாதவன் முதலில் தான் ஒரு ராணுவ அதிகாரி ஆக வேண்டும் என விரும்பினார். ஆனால் வயது வரம்பு காரணமாக அப்போது அவரால் ராணுவத்தில் இணைய முடியவில்லை
1996ல் வெளியான ஒரு டால்கம் பௌடர் தொலைக்காட்சி விளம்பரம் மூலம் மீடியாவில் கால் பதித்தார் மாதவன். ஜீ டிவியில் ஒளிபரப்பான பனேகி அப்னி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.
ஆனால், 2000ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அலைப்பாயுதே திரைப்படம் மூலம் பிரபலமடைந்தார் மாதவன். இவரது அழகான சிரிப்புக்கு பலரும் அடிமையாக்கினர். சாக்லேட் பாய் என்ற பட்டத்தை அறிமுகப்படுத்தியதே இவருக்கு பிறகு தான் எனலாம்!
நடிகர் மாதவனுக்கு 2010ல் பீடா அமைப்பு ‘Hottest Vegetarian' என்ற பட்டத்தை வழங்கியது
1999ல் சரிதா பிர்ஜி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்
மாதவன் மணிரத்னம் இயக்கிய இருவர் திரைப்படத்தில் நடிக்க ஆடிஷன் செய்தார். ஆனால் அந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகே அலைப்பயுதே படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் மின்னலே, இந்தியில் ரெஹ்னா ஹை தேரே தில் மே போன்ற திரைப்படங்கள் இவருக்கு புகழை தேடித்தந்தன. இந்த படங்கள் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்தார் மாதவன்
1997ல் இன்ஃபர்னோ என்ற ஹாலிவுட் படத்தில் கேமியோ ரோலில் நடித்தார் மாதவன்
நடிகர் மாதவன் மொத்தம் 7 மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மலாய், மலையாளம் ஆகிய மொழிகளில் இவர் சிறந்து விளங்குவதால், இந்த எல்லா மொழி படங்களிலும் நடித்துள்ளார்.