Priyadharshini R
சம்யுக்தா 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி கேரளா, பாலக்காட்டில் பிறந்தார்.
அவர் தனது பள்ளிப்படிப்பை தத்தமங்கலம் சின்மயா வித்யாலயாவில் பயின்றார். கேரளாவில் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.
அதன்பின்னர் சினிமாவிற்கு நுழைந்தார் சம்யுக்தா. இவர் முதன்முதலாக 2015 இல் பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார்
2018 இல் தீவண்டி திரைப்படத்தில் நடித்த பிறகு பிரபலமானார்.
இவர் 2018-ம் ஆண்டு "களரி" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
களரி திரைப்படத்தில் நடிகர் கிருஷ்ணாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஜூலை காற்றில் என்னும் தமிழ் படத்தில் கூட நடித்துள்ளார்.
தற்போது மீண்டும் கோலிவுட்டில் எண்டரி கொடுத்து, தனுஷின் வாத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் சம்யுக்தாவுக்கு உருவாகியுள்ளனர்.
இவரை இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.