Kangana Ranaut : வெறும் 10 படங்களிலேயே கங்கனாவுக்கு பத்மஸ்ரீ - நடிகை ஜெயசுதா விமர்சனம்

Priyadharshini R

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் 2006-ம் ஆண்டு "கேங்ஸ்டர்" என்னும் இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.

இத்திரைப்படத்திற்காக 2006-ம் ஆண்டிற்கான பிலிம்பேர்- சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்றுள்ளார்.

இவர் 2008-ம் ஆண்டு இயக்குனர் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த "தாம் தூம்" திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார்.

இவர் 2019-ம் ஆண்டு இயக்குநர் விஜய் இயக்கத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதையின் கதை களத்தைக் கொண்டு வெளியான தலைவி படத்தில் கங்கனா நடித்திருந்தார்.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஓடிடி தளம் ஒன்றுக்காக ‘அன்ஸ்டாப்பபள்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் கலந்துகொண்ட நடிகை ஜெயசுதா கங்கனா குறித்து பேசியிருந்தார்.

நடிகை கங்கனா ரனாவத்துக்கு சில வருடங்களுக்கு முன் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவர் வெறும் 10 படங்களில் நடித்த நிலையிலேயே அந்த விருதை வழங்கி இருக்கிறார்கள்.

ஆனால், தென்னிந்தியாவில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் பலர் மத்திய அரசால் அங்கீகரிக்க படவேயில்லை என நடிகை ஜெயசுதா கருத்து தெரிவித்துள்ளார்.