LEO: கில்லி முதல் லியோ வரை விஜய் - த்ரிஷா நடிப்பில் இதுவரை வெளியான படங்கள் | Visual Story

Keerthanaa R

வரும் அக்டோபர் 19ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படம் வெளியாகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தில் ஜோடியாக விஜய் - த்ரிஷா நடித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை நான்கு படங்கள் நடித்திருக்கின்றனர். கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய படங்களுக்கு பிறகு, தற்போது ஐந்தாவதாக லியோ படத்தில் இணைந்துள்ளனர்

கில்லி (2004)

தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ஒக்கடு படத்தின் ரீமேக் தான் கில்லி. இதில் தான் முதன் முதலில் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்தனர்.

இந்த படத்தினை இயக்குநர் தரணி இயக்கியிருந்தார்.

திருப்பாச்சி (2005)

இயக்குநர் பேரரசு இயக்கிய இந்த படத்தில் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்தனர் விஜய் மற்றும் த்ரிஷா. பாசமலர், கிழக்கு சீமையிலே படத்திற்கு பிறகு, வலுவான அண்ணன் - தங்கை செண்டிமெண்ட்டில் வெளியான படம் திருப்பாச்சி.

இதுவும், தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த அன்னாவரம் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது

ஆதி (2006)

ரமணா இயக்கிய இந்த திரைப்படம், நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகர் தயாரித்திருந்தார்.

இந்த திரைப்படம் 2005ல் தெலுங்கில் வெளியான அதனொக்கடே திரைப்படத்தின் ரீமேக் ஆகும்

குருவி (2008)

கில்லி திரைப்படத்திற்கு பிறகு தரணி இயக்கிய திரைப்படம் குருவி. இதில் தான் விஜய் த்ரிஷா கடைசியாக இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம், தெலுங்கில் இயக்குநர் ராஜமௌலி இயக்கிய சத்ரபதி படத்தினை தழுவி எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது