Manimegalai : லவ் ஜிஹாத் வதந்திக்கு தரமான பதிலடி கொடுத்த மணிமேகலை - என்ன நடந்தது?

Antony Ajay R

தான் மதம் மாறிவிட்டதாக ட்விட்டரில் பொய் செய்தி பரப்பியவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் மணிமேகலை

சன் மியூசிக் தொகுப்பாளராக அறிமுகமாகி விஜய் டிவியில் கலக்கி வருகிறார் மணிமேகலை.

மிஸ்டர் அண்ட் மிசர்ஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் இவரது பர்ஃபாமன்ஸ் வேர லெவல் என ரசிகர்கள் புகழ்வது வழக்கம்.

மணிமேகலைக்கும் லாரன்ஸ் மாஸ்டரின் உதவியாளராக இருந்த ஹுசைன் என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இவர்களது புகைப்படத்தைப் பதிவிட்டு "எப்படி ஆரம்பித்து எப்படி முடிந்திருக்கிறது பார்த்தீர்களா? லவ்_ஜிஹாத் மதமென பிரிந்தது போதும்" என ஒருவர் ட்வீட் செய்திருக்கிறார்.

அந்த ட்வீட்டை குறிப்பிட்டு, "இப்படி வாழ்க்கை ஃபுல்லா உளறிட்டு இருக்கிறதுக்கு போய் உறுப்படற வேலைய பாக்கலாம்ல" என மணிமேகலை ட்வீட் செய்திருந்தார்

இறுதியில் அந்த நபர் தான் செய்திருந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டார்.

முன்னதாகவே தனக்கு இரண்டு மதமும் ஒன்றுதான். நான் பாரபட்சம் பார்பதில்லை என்பதை மணிமேகலைத் தெளிவுபடுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.