கருணாநிதி எழுதிய தமிழ் சினிமா! |Visual Story

Keerthanaa R

மு.கருணாநிதியின் திரைக்கதையில் உருவான மலைக்கள்ளன் திரைப்படம் 1954 ல் வெளியானது. எம் ஜி ஆர்-பாணுமதி நடிப்பில் வெளியான மலைக்கள்ளன் அந்த வருடத்தின் அதிக வசூலை பெற்றிருந்தது.

நடிகர் திலகம் என்று தமிழ் திரையுலகமே புகழ்ந்த சிவாஜி கனேசனின் முதல் திரைப்படம் 'பராசக்தி'. சாதி ரீதியான வசனங்களுக்காக பலதரப்பட்ட எதிர்ப்புகளை சந்தித்த பராசக்தி, இன்றும் சிறந்த திரைக்கதை-நடிப்புக்கான எடுத்துக்காட்டு

பஞ்சாக்னி என்ற மலையாள திரைப்படத்தின் ரீமேக்கான 'நியாய தராசு' திரைப்படம், கருணாநிதியின் திரைக்கதையில் உருவான படம். சமூக நீதிக்காக போராடும் ஒரு பெண்ணின் கதைதான் இந்த படம்

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் 50வது திரைப்படமான இளைஞன், எழுத்தாளர் கருணாநிதிக்கு 75வது திரைப்படம். இந்த படம், 'தி மதர்' என்ற ரஷ்ய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது

எழுத்தாளர் லக்ஷ்மியின் 'பெண் மனம்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இருவர் உள்ளம். வருடங்கள் கழித்து வெளிவந்த 'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தில் யங் சிவாஜி-சரோஜா தேவியின் காட்சிகளை, இருவர் உள்ளம் படத்திலிருந்து எடுத்திருப்பார்கள்

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம், திரைப்படமாக 'பூம்புகார்' என்ற பெயரில், கருணாநிதியின் எழுத்துகளில் உருவாக்கப்பட்டது.

1957ல் வெளிவந்த புதுமைபித்தன் திரைப்படம் மொத்தம் 105 நாட்கள் ஓடியது. தெலுங்கில் வீர கட்கம் என்று டப் செய்து இத்திரைப்படம் வெளியிடப்பட்டது.

1956ல் வெளியான ராஜா ராணி திரைப்படத்திற்கு கருணாநிதி திரைக்கதை, பாடல்கள் மற்றும் வசனம் எழுதியிருந்தார்.

முதலில் மேடை நாடகமாக எழுதப்பட்ட மனோகரா, பின்னர் சிவாஜி-ராஜகுமாரி, கண்ணாம்பா நடிப்பில் திரைப்படமாக்கப்பட்டது. நாடகத்தை எழுதியவர் பம்மல் சம்மந்த முதலியார். படத்திற்கு திரைக்கதை கருணாநிதி எழுதியிருந்தார்

1952ல் வெளிவந்த பணம் திரைப்படம், கருணாநிதி சிவாஜியுடன் இணைந்து பணியாற்றிய மற்றுமொரு திரைப்படம். இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனங்கள் கருணாநிதி எழுதியிருந்தார்.