Nayanthara: திருப்பதியில் காலணி அணிந்தது முதல் குழந்தை பெற்றது வரை- நடிகையின் 5 சர்ச்சைகள்

Priyadharshini R

திருமணத்தின் போது எழுந்த சர்ச்சை

7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் நயன்தாரா - விக்னேஷ் கடந்த ஜூன் மாதம் இருவரும் சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

மகாபலிபுரத்தில் அவர்களின் திருமணம் நடைபெற்ற பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது ஒரு சர்ச்சையாக வெடித்தது.

திருப்பதியில் காலணி

திருமணம் முடிந்த உடனே விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். அப்போது கோவில் வளாகத்தில் நயன்தாரா, செருப்பு அணிந்திருந்தை கண்டித்து பெரும் சர்ச்சையை கிளம்பியது.

நெட்ஃபிளிக்ஸ் உடனான சர்ச்சை

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்த தம்பதிக்கு நோட்டிஸ் அனுப்பியதாகவும், திருமண வீடியோவை ஒளிபரப்ப மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வந்தன.

ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் குறித்த ஆவணப்படம் கூடிய விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமே அறிவிப்பை வெளியிட்டது.

சினிமாவில் நடிக்க மாட்டார்

திருமணத்திற்கு பிறகு அவர் நடிக்க மாட்டார் என்றும், கணவர் விக்னேஷ் சிவனுடன் நேரத்தை செலவிடுவதற்காக, படங்களில் நடிப்பதில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் நயன்தாரா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

வாடகை தாய்

திருமணம் ஆன 4 மாதங்களில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டே தங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதாக கூறி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நயன்தாரா.