சுப்ரமணிய பாரதி : முண்டாசுக்காரர் முத்தமிழ் கவிதை...

Keerthanaa R

உச்சி தன்னை முகர்ந்தால்
கர்வம் ஓங்கி வளருதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி

ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் – வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?

நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே -- நல்ல
நாகமணி யுள்ள தென்பார்;
துச்சப்படு நெஞ்சிலே-நின்றன்
சோதி வளரு தடீ.

மாறனம்புகள் என் மீது வாரி வாரி வீச -நீ
கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம் காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று