Keerthanaa R
1997ல் வெளியான இந்த திரைப்படத்தில் லியானார்டோ டி காப்ரியோ கேட் வின்ஸ்லெட் இணைந்து நடித்திருந்தனர். கதாநாயகி கேட் வின்ஸ்லெட்டின் ஓவியத்தை டி கேப்ரியோ வரையும் காட்சியில் காட்டப்படும் கைகள், டைட்டானிக் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கைகள் தான் !
2004ல் வெளிவந்த இந்த படத்தில் ரியான் கோஸ்லிங் மற்றும் ரேச்சல் மெக் ஆடம்ஸ் நடித்துள்ளனர். தங்கள் கதாபாத்திரங்களுக்காக இருவருமே சார்ல்ஸ்டன் என்ற நகரத்தில் தங்கி அங்குள்ள மக்களின் இயல்புகளை புரிந்துக்கொண்டிருந்தனர்.
எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய, இதே பெயரைக் கொண்ட நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தி ஃபால்ட் இன் ஆர் ஸ்டார்ஸ். இந்த திரைப்படத்தை கடந்த 2020ஆம் ஆண்டு, இந்தியிலும் ரீமேக் செய்திருந்தனர்.
பிரபல விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான இது 2014ல் வெளியானது. ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் மனைவி ஜேன் ஹாக்கிங் எழுதிய Travelling to Infinity: My Life with Stephen என்ற புத்தகத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
தலைச்சிறந்த கணித மேதையான ஜான் நாஷ் என்பவரின் வாழ்க்கைப்படம் தான் இது. இந்த படத்தில் தோன்றும் Mathematical Equations நிஜமாகவே ஜான் நாஷ் எழுதியவை ஆகும்
எலன் டிஜெனெரஸுடனான ஒரு நேர்காணலில் படத்தின் கதாநாயகன் சானிங் டாட்டம் நிர்வாணமாக தோன்றும் ஒரு காட்சிக்கு, ப்ராஸ்தெடிக் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்டிருந்தார்.
1943ல் வெளியான இந்த படம், இரண்டாம் உலகப்போர்க்கு மத்தியில் நடக்கும் கதை.
இசைக்கலைஞர்களாக இந்த படத்தில் நடித்துள்ள ஜாக்வின் ஃபீனிக்ஸ் மற்றும் ரீஸ் விதர்ஸ்பூன், டப்பிங் செய்யாமல் அனைத்து பாடல்களையும் தாங்களே பாடினார்கள். அவர்கள் முறையே கிடார் மற்றும் ஆட்டோ ஹார்ப் ஆகியவற்றை வாசிக்கவும் கற்றுக்கொண்டனர்