Antony Ajay R
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி.
இசை வாழ்வின் ஆரம்பத்தில் ரெக்கார்டிங் இன்ஜினீயர், அரேஞ்சர், ப்ரோக்ராமர் எனப் பல வேலைகளை செய்திருக்கிறார்.
சந்தோஷ் நாராயணனின் முதல் படம் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி. தனித்துவமான இசை மூலம் முதல் படத்திலேயே கவனிக்கப்பட்டார்.
பாடல்கள் மட்டுமில்லாமல் பின்னணி இசையிலும் கலக்கக் கூடியவர் சநா. அதற்கு 2012ம் ஆண்டு வெளியான பீட்சா திரைப்படமே சாட்சி.
2013ஆம் ஆண்டு சூது கவ்வும் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக இரண்டு விஜய் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த பின்னணி இசைக்கான ஒரு விருதை வென்றார்.
மெட்ராஸ், கபாலி, காலா என்ற சந்தோஷ் நாராயணன் - ரஞ்சித் கூட்டணியில் வெளியான படங்கள் பெரும் வெற்றி பெற்றது எனக் கூறுவதை விட தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியது என்றே கூறலாம்.
ரஞ்சித், மாரி செல்வராஜ், ராஜு முருகன் போன்ற இயக்குநர்களுடன் இணைந்து வேலை செய்துள்ள சநாவின் பாடல்களில் பல சமூக நீதி கருத்துக்களை பேசுகின்றன.
ஏ.ஆர்.ரஹ்மான் , இளையராஜா , யுவன் வரிசையில் தனக்கென புது பாணியை கையில் எடுத்த சந்தோஷ் நாராயணன், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியிருக்கிறார்.
எல்லாருடைய இசையையும் என்ஜாய் செய்ய முடியும். ஆனால் சிலரது இசை தான் ஆத்ம திருப்தியை அளிக்கும். மயிலிறகால் மனதை வருடும். அப்படிப்பட்ட இசையை தரக்கூடியவர் தான் சநா. பிறந்த நாள் வாழ்த்துகள் சநா.