Antony Ajay R
மாடல் மற்றும் நடிகையான தர்ஷா குப்தாவின் உடை குறித்து பிரபல நடிகர் சதீஸ் மேடையில் பேசியது பரபரப்பை கிளப்பியது.
சன்னி லியோனியின் ஒ மை கோஸ்ட் படத்தில் சதீஸ், தர்ஷா குப்தா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
சென்னை நடந்த OMG இசை வெளியீட்டு விழாவில் சதீஸ், தர்ஷா மற்றும் சன்னி லியொனியின் உடைகளை ஒப்பிட்டு நகைச்சுவை செய்தார்.
சதீஸின் நகைச்சுவை தர்ஷாவை இழிவுபடுத்தும் விதமாக இருந்ததாக இணையத்தில் பேசப்பட்டது.
இதுகுறித்து பாடகி சின்மயி தனது ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார். "ஆண்களின் இந்த நடத்தை எப்போது மாறப்போகிறது?" என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
"சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நிங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான். #மாற்றமேகலாச்சாரம்" என்று சதீஸுக்கு அட்வைஸ் செய்திருந்தார் மூடர் கூடம் பட இயக்குநர் நவீன்
இறுதியாக சதீஸ் "நான் கூறிய காமடியே என்னிடம் தர்ஷா கூறியது தான்" என விளக்கம் அளித்துள்ளார்.
Visual Story