Priyadharshini R
1970களில் ஒப்பனைக் கலைஞராக திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார் சில்க் ஸ்மிதா.
'வண்டிச்சக்கரம்' என்ற திரைப்படத்தில் 'சிலுக்கு' என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகமானார் சில்க் ஸ்மிதா. அந்த பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்து விட்டது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.
பாரதிராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை, நேற்று பெய்த மழையில், மூன்றாம் பிறை என சில்க் ஸ்மிதா கவர்ச்சி கடந்து நடிப்பிலும் தனக்கென ஒரு முத்திரை பதித்தார்.
தான் சம்பாதித்த பணத்தை ஆந்திர மக்களுக்கு நிதியாக வாரி வழங்கிய சில்க் ஸ்மிதாவின் குணம் எத்தனை பேருக்கு தெரியும்!
தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சில்க் ஸ்மிதா மரணமடைந்த போது அவரின் உடலை பெற்றுக்கொள்ள யாரும் இல்லாததால் அனாதைப் பிணமாக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தார்.
புகழின் உச்சியில் இருந்தபோதும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல மர்மங்களை ஒளித்து வைத்திருந்த சில்க் ஸ்மிதா, மரணத்தின்போதும் மர்மங்களுடனே மண்ணுலகை விட்டு மறைந்தார். இன்றும் அவரின் இறப்புக்கான சரியான காரணங்கள் கண்டிபிடிவில்லை.
திரைத்துறையில் சில ஆண்டுகளே நடித்திருந்தாலும் மறைந்து இரண்டரை தசாப்தங்களுக்குப் பிறகும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் நடிகை சில்க் ஸ்மிதா.