Prince : விநியோகஸ்தர்களுக்கு ரூ.6 கோடியை திருப்பி கொடுத்த சிவகார்த்திகேயன் - ஏன்?

Priyadharshini R

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், உக்ரைன் நடிகை மரிய ரைபோஷப்கா, நடித்த படம் பிரின்ஸ்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி இப்படம் வெளியானது.

இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடி வாங்கியது.

சிவகார்த்திகேயன் தன்னுடைய வழக்கமான பார்முலாவான காதல், காமெடி வகையிலேயே இந்தப் படத்தையும் தேர்வு செய்திருந்தார்.

ஆனால் இந்த முறை அது ரசிகர்களுக்கு பெறும் ஏமாற்றத்தையே தந்தது.

இதனை தொடர்ந்து பிரின்ஸ் திரைப்படத்துக்கான நஷ்டத்தை நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரின்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து பொறுப்பேற்றுள்ளார்.

ரூ.6 கோடியை விநியோகஸ்தருக்கு திருப்பி அளித்துள்ளனர் சிவகார்த்திகேயன்.