Antony Ajay R
மலையாளத்தில் பெரிய இயக்குநர் பாசிலின் மகன். அப்பா மூலம் முதல் படத்தில் நுழைந்த ஃபகத்துக்கு தோல்விதான் கிடைத்தது.
முதல் படமான 'கையெத்தும் தூரத்து' தோல்வியடைந்ததும் அதனை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு சினிமாவை விட்டு விலகினார் ஃபகத். தனது தோல்விக்கு தன்னையே முழு பொறுப்பாக கருதினார் அவர்.
அதன் பிறகு அமெரிக்கா சென்று தத்துவ இயல் படிப்பில் மூழ்கினார் ஃபகத்.
7 ஆண்டுகளுக்கு பிறகு ஃபகத் ரீஎன்டரி கொடுத்த திரைப்படம் 'கேரளா கஃபே' இதில் எட்டு குறும்படங்களில் ஒன்றில் அவர் நடித்திருந்தார். எனினும் இந்த முறை அவரது நடிப்பு தனித்து கவனம் பெற்றது.
அதன் பிறகு சின்ன கதாபாத்திரம் கிடைத்தாலும் கட்சிதமாக நடித்து முடித்தார் ஃபகத். 'சாப்பா குரிசு' திரைப்படத்தில் நெகடிவ் ரோலில் அசத்தினார்.
முன்னணி நாயகனாக வளர்ந்த ஃபகத் கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார்.
22 ஃபீமேல் கோட்டயம், டைமண்ட் நெக்லஸ் போன்ற படங்களில் அவரது கிரே ஷேட் பாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன.
. `டைமண்ட் நெக்லஸ்', `நார்த் 24 காதம்', `ஆர்டிஸ்ட்', 'மாலிக்' என முதன்மைக் கதாபாத்திரமாக இருந்தால் மொத்த படத்தையும் அவரது கண்களே தாங்கிச் செல்லும்.
`ஒன் பை டூ', `காட்ஸ் ஒன் கன்ட்ரி', `பெங்களூர் டேஸ்', `டேக் ஆஃப்', 'விக்ரம்' போன்ற படங்களில் கூட்டத்தில் ஒரு நாயகனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஃபகத்.
வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் என சில தமிழ் படங்களில் நடித்ததன் மூலமே தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்திருக்கிறாட் ஃபகத்.