Priyadharshini R
கொத்தமங்களம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் எனும் நாவலை தழுவி அதே பெயரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
எழுத்தாளர் ஜெயமோகனின் “ஏழாவது உலகம்” என்ற புதினத்தை தழுவி நான் கடவுள் படம் எடுக்கப்பட்டிருந்தது.
கமல்ஹாசன் எழுத்தில் உருவான தாயம் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு ஆளவந்தான் படம் இயக்கப்பட்டது.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை திரைப்படம் ஆட்டோ சந்திரன் எழுதிய லாக்கப் நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது
எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி தான் அசுரன் திரைப்படம் எடுக்கப்பட்டது.
ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் கதையான “சிம்பிளிஃபை” என்ற நாவலை தழுவி சூரரைப் போற்று படம் எடுக்கப்பட்டு மெகா ஹிட் அடித்தது.
கல்கியின் புகழ் பெற்ற நாவலை பொன்னியின் செல்வன் திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார்.