நடிகை மஞ்சு வாரியரை பற்றி நாம் இதுவரை அறிந்திராத 7 தகவல்கள்

Hiroshini K

மஞ்சு வாரியர் "லேடி சூப்பர் ஸ்டார்" ஆஃப் மலையாள சினிமா என்னும் அந்தஸ்தை பெற்று மலையாள திரைத்துறையில் பணியாற்றும் பிரபல முன்னணி நடிகை ஆவார். இவர் மலையாள திரைப்படங்களை தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும், மலையாள திரைப்பட பின்னணி பாடகராகவும், நடன ஆசிரியராகவும் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார்.

|

instagram 

தனது நடன திறமையின் மூலம் பிரபலமான மஞ்சு வாரியர், தனது பிரபலத்தின் மூலம் முதலில் 1995ம் ஆண்டு சாக்ஷ்யம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து மலையாளத்தில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

|

instagram 

மஞ்சு வாரியரின் சுய வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக "சல்லாபம்" என்ற மலையாள திரைப்படம் 2014 நவம்பர் மாதம் வெளியாகி பிரபலமானது. இப்படம் இவருக்கு மலையாள திரையுலகம் சார்பில் ஒரு கௌரவத்தை வழங்கியுள்ளது.

|

instagram 

தேசிய திரைப்பட சிறப்பு விருது, சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருது, பிலிம் பேர் விருதுகள் என்று பல விருதுகளையும் பெற்று சிறந்த குணச்சித்திர நடிகை என்கிற பெயரையும் பெற்றிருந்தார்

|

instagram 

2015 ஆம் ஆண்டு மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த கலை நிகழ்ச்சிகளில் மெடல்கள் வாங்கிய முதல் 15 ஏழை மாணவர்களுக்கு வீடு கட்டி கொடுத்திருக்கிறார். அவர்களுடைய படிப்பு செலவுகளையும் கவனித்து வருகிறார்.

|

instagram 

நடிகை மஞ்சு வாரியார் புதிய ரேஞ்ச் ரோவர் வேலார் காரை வாங்கியுள்ளார். இதன்மூலம் மலையாள திரையுலகில் ரேஞ்ச் ரோவர் காரை வாங்கிய முதல் நடிகை என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளார்.

|

instagram 

36 வயதுக்கு பின் எடுத்த  இவருடைய இரண்டாவது இன்னிங்ஸ் இவருக்கு நன்றாகவே கைகொடுத்து உள்ளது 

|

instagram