Vijay On Instagram : ஒரே நாளில் 4 மில்லியன் ஃபாலோவர்கள் - தளபதி படைத்த சாதனை என்ன?

Antony Ajay R

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். நேற்றைய தினம் (ஏப்ரல் 2) தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டைத் தொடங்கியுள்ளார்.

தனது முதல் புகைப்படத்தை பகிர்ந்த விஜய் "ஹலோ நண்பா நண்பிஸ்" என தலைப்பிட்டிருந்தார்.

விஜயின் இன்ஸ்டாகிராம் வருகையை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். #ThalapathyOnInstagram என்ற ஹேஷ்டேக் நேற்று ட்ரெண்ட் ஆனது.

விஜய்யின் புகைப்படத்துக்கு 45 லட்சத்துக்கும் மேல் லைக்குகளும் 5 லட்சத்துக்கும் மேல் கமண்ட்களும் கிடைத்திருக்கின்றன.

முதல் புகைப்படத்தை பதிவிட்ட ஒரு மணி நேரத்திலேயே விஜய்க்கு 5 லட்சம் ஃபாலோவர்கள் கிடைத்திருக்கின்றனர்.

இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படத்தில் வெள்ளை டி-சர்டும் கருப்பு கோட்டும் அணிந்திருந்த நடிகர் விஜய் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் கலக்கினார்.

இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் ஃபாலோவர்கள் பெற்றவர்கள் பட்டியலில் கொரியன் பாடகர் கிம் டேயாங் (43 நிமிடங்கள்), ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியைத் (59 நிமிடங்கள்) தொடர்ந்து மூன்றாவது இடம் பிடித்துள்ளார் விஜய் (99 நிமிடங்கள்).

ஏற்கெனவே பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தளபதி விஜய் இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பேஸ்புக்கில் 7.8 மில்லியன் பேரும் ட்விட்டரில் 4.4 மில்லியன் பேரும் விஜய்யை பின்தொடர்கின்றனர்.

சமீபத்தில் காஷ்மீரில் விஜயின் லியோ பட ஷூட்டிங் முடிவடைந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபரில் லியோ படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

லியோ படத்தில் பாலிவுட் நட்சத்திரமான சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மலையாள நடிகர் மேத்திவ் தாமஸ், ஜௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.