Kamal Haasan: விக்ரம் வெற்றியின் தாக்கம் - இளம் இயக்குநர்களுடன் இணைய விரும்பும் நாயகன்!

Antony Ajay R

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல் இளம் இயக்குநர்களுடன் இணைய அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்களுக்கான லைனபிலேயே இதனைக் காண முடிகிறது.

ஹெச்.வினோத்

கமல் ஹாசன் அடுத்ததாக துணிவு படத்தை இயக்கிவரும் ஹெச் வினோத்துடன் இணையப்போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. ஹெச்.வினொத் அடுத்ததாக ஒரு த்ரில்லர் படத்தை இயக்குகிறார். அதில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த படத்தில் கேமியோ ரோலில் கமல் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Silverscreen Media Inc.

பா.ரஞ்சித்

கபாலி, காலா என ரஜினியை வைத்து ஹிட் கொடுத்த ரஞ்சித் கமலிடம் ஒரு ஒன்லைன் கூறியுள்ளார் என முன்னதாவே தகவல்கள் வந்திருந்தது. அந்த லைன் கமலுக்கும் பிடித்திருக்கிறதாம். இப்போது இருவருமே தங்கள் வேலைகளில் பிசியாக இருக்கின்றனர்.

வெற்றிமாறன் - கமல் கூட்டணி

வெற்றிமாறன் - கமல் கூட்டணி சில மாதங்களுக்கு முன்பே சலசலக்கப்பட்டது. ஆனால் விடுதலை, வாடிவாசல் என அவரது லைனப்பும் நெருக்கடியாக இருக்கிறது. ரசிகர்களும் வடசென்னை 2 படத்துக்கு வெறித்தனமாக காத்திருக்கும் சூழலில் கமல் - வெற்றிமாறன் கூட்டணிக்கு நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

வேட்டையாடு விளையாடு 2?

தற்போது வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வெற்றி வாகை சூடியிருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் கமலிடம் வேட்டையாடு விளையாடு 2 படத்துக்கான மேலோட்டமான கதையையும் கூறியிருக்கிறார். கமல் ஓகே சொன்னால் தயாரிக்க வேல்ஸ் நிறுவனமும் தயாராக இருக்கிறது.

விக்ரம் 2

லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸில் பெரிய தலையாக இருக்கிறார் கமல். ஆனால் விஜயுடன் அடுத்த படத்தில் இணைய தயாராக இருக்கிறார் லோகேஷ். அந்த படத்துக்குப் பிறகு விக்ரம் 2 அல்லது கைதி 2 வழியாக எல்.சி.யு-வின் அடுத்த படம் உருவாகிறது. கமல் பெரிய லைனப்புடன் இருப்பதால் கைதி 2 தான் அடுத்தப்படமாக இருக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

KH234

கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், மணிரத்னதின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் இணைந்து கமல் மற்றும் மணிரத்னத்தின் அடுத்தபடத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. இதனை K234 என குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில் மிஷ்கின் உள்ளிட்ட சில இயக்குநர்களும் கமலிடம் கதை சொல்லியிருக்கின்றனர். 

மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணாவுடன் கமல் தனது சொந்த கதையில் நடிக்க உள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. 

இப்போதைக்கு பிக்பாஸ் 6 மற்றும் இந்தியன் 2-வில் பிஸியாக இருக்கிறார் கமல்.