பொன்னியின் செல்வன்: சோழர்களை ஏன் பழிவாங்க நினைக்கிறாள் நந்தினி?

Keerthanaa R

ஆழ்வார்க்கடியான் நம்பியின் தந்தைக்கு ஒரு நாள் நந்தவனத்தில் பெண் குழந்தை ஒன்று கிடைக்கிறது. அந்த குழந்தைதான் நந்தினி. கதைப்படி நம்பியின் தங்கை என்றுக்கூட வைத்துக்கொள்ளலாம்
ஆதித்த கரிகாலன் பாண்டியனை கொன்ற பிறகு தான், நந்தினி பழுவேட்டரையரை மணந்தாள். காரணம், வீரபாண்டியனை காதலித்து வந்தாள் நந்தினி
தன் கண்முன்னே காதலனை கொன்ற ஆதித்த கரிகாலனை பழிவாங்க நினைக்கிறாள் நந்தினி
இதற்காக பழுவேட்டரையரை மணக்கிறாள்.போர் முடிந்து நாடு திரும்பிக்கொண்டிருந்த பழுவேட்டரையரை, பாண்டியனின் ஆபத்துதவிகளின் உதவியோடு தன் வலையில் விழ வைத்தாள் நந்தினி.
நந்தினியின் கடைக்கண் பார்வைக்கு இணங்காதவர் யாரும் இல்லை. கந்தன்மாறன், பார்த்திபேந்திர பல்லவன் என, அவள் அழகில் மயங்கி அவள் சொல்லுக்கு அடிமையானவர்கள் ஏராளம். ஆனால் இவர்களில் இருந்து நந்தியின் வலையில் சிக்காமல் சுதாரித்துக் கொண்டது வந்தியத்தேவன் மட்டுமே