Weight Loss செய்கிறீர்களா? காலை உணவில் இந்த மாற்றத்தை கொண்டு வாருங்கள்

Keerthanaa R

1. ராகி இட்லி:

வழக்கமாக சாப்பிடும் அரிசி மாவினால் ஆன இட்லி அல்லாமல், ராகி இட்லி சாப்பிடலாம். ராகியுடன் சிறிது சேமியா, தயிர் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் இன்னும் நல்லது. இது தயாராவதற்கும் 15 நிமிடங்கள் தான் ஆகும்

2.குயினோவா oats தோசை:

அரிசியை எந்த அளவுக்கு குறைக்கிறோமோ அவ்வளவு நல்லது. இந்த குயினோவா ஓட்ஸ் தோசை ஒரு சிறந்த மாற்று

3. முட்டை புர்ஜி:

முட்டை எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும் அதற்கான சத்து உடலுக்கு கிடைக்கும். காலை பிரேக்ஃபாஸ்ட்டிற்கு உப்புமா சலித்தால், எக் புர்ஜி சாப்பிடலாம். காய்கறிகள், குறைவான எண்ணை, இஞ்சி ஆகியவையும் சேர்க்கப்படுவதால் ஹெல்தியும் கூட

4.உப்புமா:

இட்லி, தோசைக்கு இன்ஸ்டன்ட் மாற்று உப்புமா தான். காய்கறிகள் சேர்த்து சேமியாவில் உப்புமா சாப்பிடுங்கள். இது வெயிட் லாஸுக்கு நல்ல ஆப்ஷன்

5. ஓட்மீல்:

ஓட்ஸ் சாப்பிடுபவர்கள், இதனுடன் பெர்ரி பழங்ககளை காலை வேளையில் சாப்பிடலாம். இந்திய சமையல் முறைப்படி செய்து காரசாரமாகவும் இதனை உட்கொள்ளலாம்