கொழுப்பு சேராத, எடை அதிகரிக்காத ஈவினிங் ஸ்நாக்ஸ் இதோ | Visual Story

Priyadharshini R

பாப்கார்ன்

வெண்ணெய் சேர்க்காத பாப்கார்ன் உடலில் கொழுப்பை சேர்க்காது.

மக்கானா (தாமரை விதை)

ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவு, இந்தச் சத்து மக்கானாவில் கிடைக்கிறது.

பொரி

எடை குறைய நினைப்போர், பொரியை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். 90 கிராம் மாவுச்சத்து இருப்பதால், உடனடி எனர்ஜி கிடைக்கும்.

பூசணி விதைகள்

வாரம் 3 முறை சப்ஜா விதைகள், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், வெள்ளை, கருப்பு எள், சியா விதைகளை சாப்பிட்டாலே முடி வளர்ச்சி, சரும அழகு அதிகரிக்கும்.

வறுத்த பட்டாணி

வறுத்த கடலைகளுக்குச் சுவை அதிகம். கலோரிகள் குறைவு. சாலட்டில், பொரியில் கூடக் கலந்து சாப்பிடலாம்

பீநட் பட்டர்

பொதுவாகப் பழங்களுக்கு, இனிப்பு சுவை இயற்கையாகவே இருக்கும். கூடுதலாக இந்தப் பழங்களுக்கு டிப்பாக பீநட் பட்டர் தொட்டு சாப்பிட ‘ஸ்வீட் டூத் கிரேவிங்’கை சமாளிக்கலாம்.

டார்க் சாக்லேட்

6-7 பாதாம் பருப்புகளுடன் 2 பீஸ் டார்க் சாக்லேட் சேர்த்து சாப்பிடுவது, இதய நோய்கள் வராமல் தடுத்திட உதவும். சருமம், முடி, நகம் வளர்ச்சி சீராகும்.

வெள்ளரி, கேரட் சாலட்

வெள்ளரி, கேரட்டை சாலட் போன்று செய்துக்கொள்ளலாம். இதில் சுவை மிகுதியாக இருக்கும். எடையும் அதிகரிக்காது. உடலுக்கும் மிக நல்லது.

அவல்

வாழைப்பழம் தேங்காய் துருவல், ஒரு பேரீச்சை கலந்து மிக்ஸியில் அரைக்கவும். இதைக் கப்பில் போட்டுக்கொள்ளவும், 50-70 கிராம் அவல் சேர்த்து சாப்பிடலாம்.