சளி, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல்: பனிக்கால பிரச்னைகளிலிருந்து தப்பிக்க எளிய வழிமுறைகள்

Antony Ajay R

குளிர்க் காற்றில் நடைபயிற்சி செய்வதைத் தவிர்க்கலாம். முக்கியமாக இதயநோய்கள் உள்ளவர்கள். வீட்டுக்குள்ளேயே நடக்கலாம். அல்லது மப்லர், சொட்டர்களைப் பயன்படுத்தலாம்.

குடிக்கவும் குளிக்கவும் வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தவும்.

பனிக்காலத்தில் அதிகம் மசாலா சேர்த்த உணவுகளைத் தவிர்க்கவும். காரம், புளிப்பு இவற்றை குறைத்துக் கொள்ளலாம். குளிர்பானங்கள், நீர்ச்சத்துள்ள காய்கறிகளைத் தவிர்க்கலாம்.

ரோட்டோரக் கடைகளில் சாப்பிடுவதோ, ஃபாஸ்புட் உணவுகளை உண்பதையோ தவிர்க்கலாம்.

ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் உணவுகளை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இயல்பான வெப்பநிலைக்கு வந்தவுடன் அவற்றைப் பயன்படுத்தலாம். 

ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள், பகல் நேரங்களைத் தவிர, அதிகாலை, மாலை  நேரத்துக்குப் பிறகு  வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம். மேலும், ஒட்டடை அடிப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்யாமலிருக்கலாம்.

தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது. மூச்சுப்பயிற்சி, யோகா, தியானத்துக்கு தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் ஒதுக்கலாம்.

இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.

கை,கால்களைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். இதைக் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்தலாம். சுகாதாரமற்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்.

பனி பொழியும் அதிகாலையிலும், பின் இரவுகளிலும், வெளியில் செல்லும்போது காதுக்குப் பஞ்சு வைத்துக்கொள்ளலாம் அல்லது மப்ளர் போன்றவற்றால் காதுகளை மறைத்துக்கொள்ளலாம்