கூகுள் CEO சுந்தர் பிச்சை பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!

Priyadharshini R

1972 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சுந்தரின் முழுப்பெயர் பிச்சை சுந்தரராஜன்.

எலக்ட்ரிக்கல் இன்ஜினியரான அவரது தந்தை, குடும்பத்திற்கு ஒரு புதிய ஸ்கூட்டர் வாங்க மூன்று வருடங்கள் சேமிக்க வேண்டியிருந்தது, ஆனால் தற்போது சுந்தர் பிச்சை $150 மில்லியன் மதிப்புடையவர்.

அவரது 12 வயது வரை அவரது குடும்பத்தில் யாருமே தொலைபேசி வைத்திருக்கவில்லை.

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் இளங்கலை பொறியியல் பட்டம் பெறுவதற்கு முன்பு, பிச்சை தனது உயர்நிலைப் பள்ளி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார்

கூகுளில் சேர்வதற்கு முன், மெக்கின்சி & கம்பெனியுடன் நிர்வாக ஆலோசனையை மேற்கொண்டார்.

அவர் கூகுளில் சேருவதற்கு முன்பு தனது நண்பரை கூகுளில் பணிப்புரிவது குறித்து பேசியிருக்கிறார்.

எண்களை அதிகம் நினைவு வைத்துக்கொள்வதில் வல்லவர். சிறு வயதில் டயல் செய்த ஒவ்வொரு தொலைபேசி எண்ணையும் நினைவு வைத்திருந்தாராம்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு சுந்தர் பிச்சை போட்டியிட்டார். ஆனால் இறுதியில் அந்த பதவி சத்யா நாதெல்லா என்பவருக்கு சென்றது.

கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி மாணவர்களுடன் அதிகம் ஸ்கைபில் உரையாடுவதாகவும் ஒரு தகவல் உள்ளது.