Priyadharshini R
ராகுல் காந்தி, பாரத் ஜோடோ என்ற பெயரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை நடத்தி வருகிறார். இந்த ஒற்றுமைப் பயணம், கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது.
கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களை கடந்து டெல்லியில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை ராகுல் காந்தி தொடர்ந்து வருகிறார்.
100 நாட்களைக் கடந்து தொடரும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் நேற்று திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார்.
இந்நிலையில் இந்திய ஒற்றுமை பயணத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
பின்னர் பேசிய கமல்ஹாசன் என்னைப் பொறுத்தவரை இந்திய ஒற்றுமை பயணம் என்பது ஒரு தொடக்கம்தான் என்றார்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு நெருக்கடி வரும்போது எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், நான் போராட்டத்தில் இறங்குவேன் - கமல்ஹாசன்