Keerthanaa R
பாஜக சார்பில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்
குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் பிறந்த ரிவாபா ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். இவரது தந்தை ஒரு தொழிலதிபர், தாயார் ரயில்வே துறையில் பணியாற்றியவர்
2017ல் இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவை மணந்தார். இந்த தம்பதிக்கு நித்யானா என்ற மகள் இருக்கிறார்
2019ல் பாஜகவில் இணைந்தார் ரிவாபா. அதற்கு முன் அவர் கரனி சங்கத்தின் உறுப்பினராக இருந்தார். பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து சேவைகள் செய்துவந்தார்
முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்ட ரிவாபா, 62000த்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று, ஜாம்நகர் வடக்கு தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளார்