Keerthanaa R
கால்பந்து உலகின் மன்னன், மூன்று முறை உலகக்கோப்பை வென்ற ஓரே வீரன், தனது அசாத்திய திறமையால், கால்பந்து விளையாட்டை உலக மக்களின் கவனத்திற்கு இட்டு சென்றவர்.
கிரிக்கெட்டுக்கு எப்படி சச்சின் டெண்டுல்கரை நாம் அடையாளம் சொல்கிறோமோ அப்படி கால்பந்தின் அடையாளமாக திகழ்ந்தார் பீலே. இவர் பிரேசில் அணிக்காக 92 போட்டிகளில் விளையாடி, 77 கோல்களை அடித்துள்ளார்.
1950ல் பிரேசில் கால்பந்து உலகக்கோப்பையில் தோற்றப்போது, அழுத தந்தையை தேற்றுவதற்காக "ஒரு நாள் நான் பிரேசிலுக்கு உலகக்கோப்பையை வென்று தருவேன்" எனக் கூறினார்.
கிளப்களில் விளையாடி வந்த பீலே, தன் 16வது வயதில் முதன் முறையாக பிரேசில் அணியில் இடம்பெற்றார். 1958ல், தன் 18வது வயதில் முதல் உலகக்கோப்பை போட்டியில் விளையாடினார் பீலே.
இரண்டு கோல்கள் அடித்து, பிரேசிலுக்கு முதல் உலகக்கோப்பையை பெற்று தந்தார். தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றினார்.
தொடர்ந்து 1962, 1970 ஆகிய ஆண்டுகள் நடந்த உலகக்கோப்பையையும் தொடர்ச்சியாக வென்றது பிரேசில் அணி. மூன்று உலகக்கோப்பையை தொடர்ந்து வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை அடைந்தார் பீலே.
உலகக்கோப்பையில் மட்டும் தனது அணிக்காக இவர் 12 கோல்களை அடித்துள்ளார்.
தனது வாழ்நாளில் மொத்தம் 1,281 கோல்களை அடித்து உலக சாதனை படைத்திருக்கிறார்.
FIFA உலகக்கோப்பையில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என்ற கின்னஸ் சாதனையும் இவருக்கு சொந்தம்.
கால்பந்து கிங், கால்பந்து உலகின் 'கறுப்பு முத்து' (Black Pearl) என்று கால்பந்தை தாண்டியும் உலகம் இவரை கொண்டாடியது.