விராட் கோலி - சச்சின் : 14 ஆண்டுகளில் சாதித்தது என்ன? - ஓர் ஒப்பீடு

Antony Ajay R

விராட் கோலி 2008 ஆகஸ்டில் தனது சர்வதேச கிரிக்கெட் கெரியரைத் தொடங்கினார். இதுவரை அவர், ஒருநாள் போட்டிகளில் 253 இன்னிங்ஸ் விளையாடியிருக்கிறார்.

சச்சின் 1989ல் தனது கெரியரைத் தொடங்கியது முதல் 14 ஆண்டுகளுக்கு ஒருநாள் போட்டிகளில் 312 இன்னிங்ஸ் விளையாடியிருக்கிறார்.

விராட் இதுவரை 12,344 ரன்கள் அடித்திருக்கிறார் சராசரி 57.68

சச்சினின் 14 ஆண்டு கேரியரில் 12,686 ரன்கள் அடித்திருக்கிறார். அவரது சராசரி 45.14 ரன்கள்.

விராட் கோலி 43 சதங்களும் 64 அரை சதங்களும் அடித்திருக்கிறார்.

சச்சின் 1989 முதல் 2003 வரை 14 ஆண்டுகளில் 36 சதங்களும் 64 அரை சதங்களும் அடித்திருக்கிறார்.

விராட் கோலி ODI Strike Rate 92.84

சச்சின் ODI Strike Rate 86.63

இரண்டு வீரர்களை ஒப்பிடுவதன் மூலம் ஒருவரை சிறந்த வீரர் எனக் கூறிவிட முடியாது. எனினும் வீரர்களின் திறன்களை அறிய ஒப்பிடுதல் அவசியமாகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் Howstat மற்றும் mashable தளங்கள் அடிப்படையிலானவை.