காஞ்சியில் வாழ்ந்து வரும் இளவரசன் ஆதித்தன், அங்கு பொன் மாளிகை ஒன்றை நிறுவுகிறான். சோழ நாட்டையும், அரசரையும் ஆபத்து சூழ்ந்துள்ளதை அடுத்து, தந்தை சுந்தர சோழ சக்கரவர்த்தியையும் தாயார் வானமாதேவியையும் அங்கு தன் பாதுகாப்பில் வைத்துகொள்ள விரும்பி, வந்தியத்தேவன் மூலம் தூது அனுப்புகிறான்.